பாலா இயக்கி வரும் தாரை தப்பட்டை படம் ஒரு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் தொடங்கியுள்ளது.
பரதேசி' படத்திற்கு பிறகு சசிகுமாரை நாயகனாக வைத்து பாலா இயக்கி வரும் படம் ‘தாரை தப்பட்டை'. இளையராஜா இசையமைக்கும் ஆயிரமாவது படம் என்ற பெருமையுடன் இந்தப் படம் உருவாகிறது.
சசிகுமாருக்கு ஜோடியாக நடிக்கிறார் வரலட்சுமி. பாலா தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் பி ஸ்டுடியோஸ் மூலம் தயாரித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு தஞ்சை, குடந்தை பகுதிகளில் நடைபெற்று வந்த நிலையில், சசிகுமார் காயமடைந்த காரணத்தால் படப்பிடிப்புக்கு திடீரென சிறு இடைவெளி கொடுத்தனர்.
இப்போது சசிகுமார் படப்பிடிப்புக்குத் தயாராகிவிட்டார். பாலாவும் படப்பிடிப்பைத் தொடங்கிவிட்டார். ஒரு கரகாட்டப் பாடலுடன் இந்த ஷெட்யூலில் காட்சிகளைப் படமாக்குகிறார் பாலா.
இந்த ஆண்டு இறுதியில் படம் வெளியாகும் எனத் தெரிகிறது.
Post a Comment