சென்னை: தான் தயாரிக்கும் படங்களின் வெளியீட்டுத்தேதியை படபூஜையன்றே அறிவித்து விடுவது நடிகர் விஷாலின் வழக்கம். ஏற்கனவே அவரின் விஷால் பிலிம் பேக்டரி சார்பில் தயாரித்த, நான் சிகப்பு மனிதன் மற்றும் பாண்டியநாடு போன்ற படங்கள் சொன்ன தேதியில் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.
அதே போல இப்பொது விஷால் நடித்து தயாரிக்கும் பாயும் புலி திரைப்படத்தை விநாயகர் சதுர்த்தி அன்று வெளியிடத் திட்டமிட்டு இருக்கிறார் விஷால், படபூஜையன்றே வெளியீட்டுத் தேதியை அறிவித்து இருந்த விஷால் தற்போது சொன்னபடி படத்தை வெளியிடுகிறார்.
ஆனால் நிறைய விஷயங்களில் நடிகர் விஜயை பின்பற்றத் தொடங்கி இருக்கிறார் விஷால், நடக்கும் நிகழ்வுகளை வைத்துப் பார்க்கும்போது அப்படித்தான் தோன்றுகிறது. விஷால் விஜயை எந்த விஷயங்களில் பின்பற்றுகிறார் என்று பார்க்கலாம்.
புலி திரைப்படத்தில் பணியாற்றியவர்களுக்கு தங்க நாணயங்களை பரிசளித்தார் விஜய், பாயும் புலி திரைப்படத்தில் பணி புரிந்தவர்களுக்கு தங்க நாணயங்களை வழங்கினார் விஷால்.
புலி என்று விஜயின் படத்திற்கு பெயர் இடப்பட்டது, பாயும் புலி என்று பெயர் வைத்தார் விஷால்(இது தற்செயலாக நடந்தது போல தெரியவில்லை)
விநாயகர் சதுர்த்தி அன்று புலி திரைப்படம் வெளியாகும் என்று அறிவிப்பு வந்தது, பாயும் புலியை அதே தேதியில் வெளியிடுகிறார் விஷால்.
புலி படத்தின் பாடல் வெளியீடு ஆகஸ்ட் மாதம் 2 ம் தேதி அன்று வெளியாகிறது, அறிவிப்பு வந்தவுடனேயே பாயும் புலியின் பாடல்களையும் அதே தேதியில் வெளியிட முடிவு செய்து இருக்கிறார் விஷால்.
வெல்வது எந்தப் புலி - பொறுத்திருந்து பார்க்கலாம்..
Post a Comment