மும்பை: தினசரி ஊடகங்களில் தவறாது இடம்பிடித்து விடுகிறார் சன்னி லியோன், அம்மணியின் ராசி என்ன தொட்டாலும் துலங்கி விடும் போல. இரு தினங்களுக்கு முன்பு தான் ஒரு சர்ச்சையில் இடம்பெற்று மீண்டு வந்தார்.
அதற்குள் அடுத்த பிரச்சினையில் மாட்டி இருக்கிறார், இந்த முறை சன்னிக்கு பிரச்சினையை அளித்து இருப்பது ஒரு படம். சமீபத்தில் சன்னியின் நடிப்பில் உருவான படம் மஸ்தி ஜாதே, இந்தப் படத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர் மிலப் சாவேரி.
சென்சார் போர்டுக்கு அனுப்பப்பட்ட இந்தப் படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு, சான்றிதழ் வழங்க மறுத்து விட்டனர், இதற்கு அவர்கள் கூறிய காரணம் படத்தில் ஆபாசக் காட்சிகள் அதிகம் இருக்கின்றன என்பது.( சன்னி லியோன் படத்துல ஆக்சன் காட்சிகளா இருக்கும்).
மும்பை சென்சார் போர்டு அதிகாரிகளின் முடிவை ஏற்றுக் கொள்ளாத படத்தின் தயாரிப்பாளர் சென்சார் போர்டுக்கு மேலே உள்ள அத்தனை கமிட்டிகளுக்கும் சென்று படத்தைத் திரையிட அனுமதி கேட்க, எல்லா கமிட்டிகளும் படத்திற்கு அனுமதி வழங்க மறுத்துவிட்டன.
எந்தக் காட்சிகளில் ஆபாசம் அதிகம் இருக்கிறதோ அதனைச் சொல்லுங்கள் வெட்டி விடுகிறோம் என்று தயாரிப்பாளர் சொல்ல, நாங்கள் கைவைத்தால் டைட்டில் கார்டுதான் மிஞ்சும் என்று கூறிவிட்டார்களாம் சென்சார் போர்டு அதிகாரிகள்.
இப்போது சென்சார் போர்டுக்கு எதிராக கோர்ட்டில் வழக்குத் தொடரப் போகிறாராம் தயாரிப்பாளர், படத்தில் சன்னி 2 வேடங்களில் நடித்து இருக்கிறாராம்.
Post a Comment