சென்னை: சங்கத் தலைவி நடிகை தன்னை தேடி வரும் இயக்குனர்களிடம் தன் அக்காவுக்கும் ஒரு கதாபாத்திரம் அளிக்குமாறு கேட்கிறாராம்.
சங்கப் படம் மூலம் பிரபலமானவர் அந்த ஆந்திர நடிகை. அவர் மீண்டும் சங்கத் தலைவருடன் சேர்ந்து நடித்த படமும் ஹிட்டானது. நடிகையின் மார்க்கெட் கோலிவுட்டில் பாதிப்பில்லாமல் உள்ளது. ஆனால் அவரது அக்கா நடிகைக்கு தான் தமிழிலும் சரி, தெலுங்கிலும் சரி மார்க்கெட் சரியில்லை.
அக்காவின் நிலைமையை பார்த்து பாவப்பட்ட சங்கத் தலைவி அவருக்கு வாய்ப்பு வாங்கிக் கொடுக்க முடிவு செய்துள்ளார். இதனால் தன்னை படங்களில் ஒப்பந்தம் செய்ய வரும் இயக்குனர்களிடம் சார், என்னோடு சேர்த்து என் அக்காவுக்கும் ஒரு கதாபாத்திரம் கொடுங்களேன் என்று கேட்கிறாராம்.
என் படத்தில் அப்படி ஒரு புது கதாபாத்திரத்திற்கு வழியில்லை என்று யாராவது கூறினால் சார், நீங்கள் கூறிய கதையில் வருகிறதே அந்த கதாபாத்திரம் அதையே என் அக்காவுக்கு கொடுத்துவிடுங்கள். நான் ஒன்றும் உங்களிடம் சும்மா என் அக்காவுக்கு வாய்ப்பு கேட்கவில்லை. என் அக்காவை நடிக்க வைத்தால் நான் சம்பளத்தை குறைக்கத் தயார் என்கிறாராம் சங்கத் தலைவி.
அவரின் இந்த அக்கா நிபந்தனையை கேட்டு பல இயக்குனர்கள் சொல்வது தெரியாமல் விழிக்கிறார்களாம்.
Post a Comment