சென்னை: இதுவரை தமிழ்த் திரையுலகில் இதுவரை 50 லட்சத்திற்கும் அதிகமான பேரால் கண்டுகளிக்கப்பட்ட டீசர் என்ற பெருமையை விக்ரம் மற்றும் அஜீத் ஆகியோரின் படங்கள் பெற்றிருந்தன.
இந்த வரிசையில் தற்போது விஜயும் இணைந்திருக்கிறார், ஆமாம் கடந்த ஜூன் மாதம் 21 ம் தேதி அன்று வெளியான புலி படத்தின் டீசரை இதுவரை 51 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் பார்த்து ரசித்துள்ளனர்.
விக்ரமின் நடிப்பில் வெளிவந்த ஐ படத்தின் டீசர் 1 கோடியே 11 லட்சத்திற்கும் அதிகமான பேரால் கண்டுகளிக்கப்பட்டிருந்தது, இதுவரை வெளிவந்த தமிழ்ப் பட டீசர்களிலேயே அதிகமான பேரால் கண்டுகளிக்கப்பட்ட டீசர் இதுவாகத்தான் இருக்கும்.
அதற்கு அடுத்த இடத்தில் அஜீத்தின் என்னை அறிந்தால் டீசர் உள்ளது, என்னை அறிந்தால் டீசர் சுமார் 53 லட்சத்திற்கும் அதிகமான பேரால் கண்டுகளிக்கப்பட்டு இருந்தது. தற்போது மூன்றாவது இடத்தை விஜயின் புலி டீசர் பிடித்துள்ளது.
இந்தச் சாதனையில் புதிதாக இணைந்திருக்கும் விஜய் என்னை அறிந்தால் படத்தின் டீசரை இன்னும் ஒரு சில தினங்களில் கடந்து விடுவார், ஆனால் ஐ படத்தின் ரெக்கார்டை அவரால் முறியடிக்க முடியுமா என்பது சந்தேகமே.
Post a Comment