கல்லூரி மாணவிகளின் காட் மதர் ஆன நீலாம்பரி

|

சினிமாவில் முதல் வசந்தமாய் வந்து... கதாநாயகியாக நடித்து... கவர்ச்சி நடிகையாக மாறிய அந்த நடிகை, உச்ச நட்சத்திரத்தின் படத்தில் நீலம்பரியாக மாறி வில்லத்தனம் செய்து பிரபலமானார்.

சினிமாவில் நடித்தாலும் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து பிரபலமான தயாரிப்பாளராகவும் உயர்ந்துள்ளார். தன்னுடைய சீரியல்களில் அழகிய இளம்பெண்களுக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறாராம் நீலாம்பரி. கல்லூரி விழாவில் பங்கேற்கப் போகும் போது அழகான மாணவிகளைப் பார்த்து சீரியலில் நடிக்க அழைப்பு விடுக்கிறாராம் நீலாம்பரி. அதோடு மட்டுமல்லாது தனக்கு தெரிந்து இயக்குநர்களிடமும் சிபாரிசு செய்கிறாராம். இதனால் நீலாம்பரியை சுற்றி வந்து வாய்ப்பு கேட்கும் கல்லூரி மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறதாம்.

சினிமா வேண்டாம் சின்னத்திரை போதும்...

சினிமாவில் நடிக்க வாய்ப்பு வருகிறது... ஆனாலும் சின்னத்திரையே போதும் என்று கூறிவிட்டேன்... இது நட்சத்திர சேனலில் பிரியமான தொகுப்பாளினியின் சமீபத்திய ஸ்டேட்மென்ட். ரேடியோ ஜாக்கி ஆகவேண்டும் என்று நினைத்த பிரியம் வீடியோ ஜாக்கி ஆகிவிட்டாராம். இதுவே இந்தியா முழுவதும் பிரபலப்படுத்திவிட்டது. இதற்கு காரணம் அண்ணன்தான் என்று நன்றி கூறும் பிரியம், நிகழ்ச்சிக்கு வரும் பிரபலங்கள் சினிமாவில் நடிக்க அழைக்கின்றனர். ஆனால் நடிப்பு எனக்கு வராது என்று ஒரே ஒரு கும்பிடு போட்டு முடித்துக்கொள்கிறேன் என்கிறார் பிரியம்.

இப்படி சொன்னவங்கதான் இப்போ சினிமாவில் குத்தாட்டம் போடுகின்றனர் அம்மணி...

 

Post a Comment