இப்ராகிம் ராவுத்தர் உடல் அடக்கம்... திரையுலகினர் அஞ்சலி

|

பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் இப்ராகிம் ராவுத்தர் உடல் இன்று சாலிகிராமம் பள்ளிவாசலில் அடக்கம் செய்யப்பட்டது. அவருக்கு திரையுலகினர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.

உடல் நலக்குறைவால் சென்னையில் நேற்று மரணம் அடைந்தார் இப்ராகிம் ராவுத்தர். அவரது உடல் வடபழனி நூறடி சாலையில் உள்ள ராவுத்தர் பிலிம்ஸ் அலுவலத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. திரையுலகினர் பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.

Ibrahim Rawther body buried

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தயாரிப்பாளர் சங்க தலைவர் கலைப்புலி தாணு, இசையமைப்பாளர் இளையராஜா, நடிகர்கள் விஷால், மன்சூர்அலிகான், கருணாஸ், சுந்தர்ராஜன் எம்.எல்.ஏ., இயக்குநர் செந்தில்நாதன், கலைப்புலி சேகரன், ஆனந்தராஜ், தயாரிப்பாளர்கள் கே.ஆர்., ஏ.எல்.அழகப்பன், முரளிதரன், கே.ராஜன், ஏ.என்.சுந்தரரேசன், சவுந்தர், கப்பார், சவுந்தர் முருகன், துரைராஜ், பெப்சி விஜயன், அருண்பாண்டியன், மக்கள் தொடர்பாளர்கள் டைமண்ட் பாபு, சிங்காரவேலன் உள்பட பலர் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.

பகல் 12 மணிக்கு இப்ராகிம் ராவுத்தர் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு சாலி கிராமத்தில் உள்ள பள்ளிவாசலில் அடக்கம் செய்யப்பட்டது.

 

Post a Comment