பொம்மலாட்ட நாயகிக்கு டும் டும் டும்

|

சூரிய தொலைக்காட்சியில் காலை நேரத்தில் பொம்மலாட்டம் டிவி சீரியலை பார்த்தவர்களுக்கு அந்த நாயகியை தெரியாமல் இருக்காது. அழகான அசத்தலான நடிப்பு... ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான தோற்றம் என இல்லத்தரசிகளை கொள்ளை கொண்டவர் நாயகி.

அறிமுகமானது என்னவோ பொம்மலாட்டம் சீரியலில்தான் என்றாலும் பொறுமையான பொறுப்புள்ள மருமகள் இவரைப்போல வரவேண்டும் என்று எத்தனையோ இல்லத்தரசிகளின் ஏக்கமாம்.

குடும்ப பாங்கான தோற்றம் கொண்ட அந்த நாயகிக்கு தற்போது வீட்டில் மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கியுள்ளனராம். ஒரே ஒரு தொடரில்தான் நடித்துக்கொண்டிருக்கும் அந்த நாயகி தற்போதுதான் திருமணத்திற்கு சம்மதம் கூறியுள்ளாராம்.

பொம்மலாட்டம் போல வேறு ஒரு நல்ல சீரியல் கிடைத்தால் நடிப்பது இல்லை எனில் வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளையை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிடுவது என்ற முடிவோடு இருக்கிறாராம் பொம்மலாட்டம் நாயகி.

நல்லா மாப்பிள்ளையா பாருங்கம்மா... சந்தோஷ் மாதிரி மாப்பிள்ளை பார்த்தால் அப்புறம் திருத்தி சரி பண்ணி நேரம் சரியா போயிரும்...

 

Post a Comment