குடும்பம் குடும்பமாக "பாலக்காட்டுக்குப்" படையெடுக்கும் மக்கள்.. சந்தோஷத்தில் "மாதவன்"!

|

சென்னை: நடிகர் விவேக் நடிப்பில் இன்று வெளிவந்திருக்கும் மற்றொரு படம் பாலக்காட்டு மாதவன். விவேக்குடன் இணைந்து நடிகை சோனியா அகர்வால், செம்மீன் ஷீலா மற்றும் சிங்கமுத்து போன்ற நட்சத்திரப் பட்டாளங்கள் நடித்துள்ளனர்.

Palakkattu Madhavan – Fans Reviews

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வெளிவந்திருக்கும் பாபநாசம் திரைப்படம் திரில்லர் கலந்த குடும்பப்படமெனில், விவேக்கின் பாலக்காட்டு மாதவன் நகைச்சுவை கலந்த குடும்பப்படமாக வெளிவந்து இருக்கிறது.

படம் நகைச்சுவையுடன் கலந்து நன்றாக எடுக்கப்பட்டிருக்கிறது. குடும்ப உறுப்பினர்களால் நிரம்பி வழிகின்றன தியேட்டர்கள், என்று சமூக வலைதளங்களில் கருத்துத் தெரிவித்துள்ளனர் ரசிகர்கள்.

படத்தில் அஜீத்தின் பெயரைப் பயன்படுத்தி இருக்கிறார் விவேக் என்று சந்தோஷத்துடன் கூறியிருக்கும் ரசிகர்கள், படம் நன்றாக இருக்கிறது குடும்பத்துடன் பார்க்கலாம் என்றும் சர்டிபிகேட் கொடுத்துள்ளனர்.

 

Post a Comment