சென்னை: வரும் ரம்ஜான் தினத்தன்று சிவகார்த்திகேயனின் ரஜினிமுருகன் , தனுஷின் மாரி மற்றும் சிம்புவின் வாலு மூன்று படங்களும் மோதுவது உறுதி என்று அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.
காத்திருந்தவர்களின் நினைப்பை தவிடுபொடியாக்கி இருக்கிறது தனுஷின் தாராள மனசு, ஆமாம் ஜூலை 17 ம் தேதி போட்டியில் இருந்து பின்வாங்கி இருக்கிறார் தனுஷ். மாரி படம் ஜூலை 17 ல் வெளியாவதற்குப் பதிலாக 24ம் தேதி வெளியாகிறது.
ரஜினிமுருகன் படத்தைப் பற்றி எந்த ஒரு தகவலும் இல்லை, எனவே தற்போதைய சூழ்நிலையில் சோலோவாக வருகிறது சிம்புவின் வாலு திரைப்படம். தனுஷ் சிம்புவிற்கு உதவி செய்யும் நோக்கத்தில் படத்தைத் தள்ளி வைத்தாரா அல்லது நமது போட்டி சிவகார்த்திகேயனுடன் தான் என்று பின்வாங்கினாரா தெரியவில்லை.
ஒருவேளை சிம்புவின் அப்பா டி.ராஜேந்தர் கூறியது போல இந்தக் குருபெயர்ச்சி சிம்புவிற்கு நன்மையைத் தந்துள்ளதா, காரணம் எதுவாக இருப்பினும் சோலோவாக வெளிவரும் வாலு நன்றாக ஓடினால் சரிதான்.
Post a Comment