பக்தி ஓ.கே.. சாம்பார் எதுக்கு?... "சிக்கன்" கேட்டு டிமாண்ட் செய்த ரம்யா கிருஷ்ணன், கஸ்தூரி!

|

ஹைதராபாத்: 18 வருடத்திற்கு முன்பு வெளியாகி ஹிட்டான அன்னமயா படத்தின் ஷூட்டிங்கின்போது அப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்த ரம்யா கிருஷ்ணனும், கஸ்தூரியும் செய்த சில நெருக்கடிகள் குறித்து தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 1997 ம் ஆண்டு நாகார்ஜுனா நடிப்பில் வெளியான படம் அன்னமயா, 15 ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு துறவியைப் பற்றிய கதை இது. துறவி பாத்திரத்தில் நாகார்ஜுனா நடித்து இருந்தார், நாகார்ஜுனாவுடன் இணைந்து நடிகைகள் ரம்யா கிருஷ்ணன் மற்றும் கஸ்தூரி இருவரும் நடித்து இருந்தனர்.

Annamaya Shooting Time: Ramya Krishnan And Kasthuri Both Heroines Asking For “Chicken”

படம் துறவியைப் பற்றியது என்பதால் கோவில் போன்ற அரங்குகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்புகள் நடந்தன, இதில் பக்தைகளாக ரம்யா கிருஷ்ணனும் கஸ்தூரியும் நடித்து இருந்தனர்.

பக்தியை வலியுறுத்தும் படம் என்பதால், யாரும் அசைவ உணவு சாப்பிடக் கூடாது என்று இயக்குநர் ராகவேந்திர ராவ் கூறி இருந்தார். முதல் 2 நாட்கள் வரை எந்தப் பிரச்சினையும் இன்றி எல்லாம் ஒழுங்காகத் தான் சென்றது.

படப்பிடிப்பில் இருந்த அனைவருமே காய்கறி மற்றும் சாம்பார் போன்ற உணவுகளைச் சாப்பிட்டு கடுமையாக பக்தியைக் கடைப்பிடித்தனர். மூன்றாவது நாள் படப்பிடிப்புக்கு நடிகைகள் கஸ்தூரியும், ரம்யா கிருஷ்ணனும் வந்தனர்.

படப்பிடிப்பு முடிந்து மதியம் இருவரும் சாப்பிடும்போது சைவ உணவுகள் பரிமாறப்பட அதிர்ச்சி அடைந்த இருவரும், எங்களுக்கு சாம்பார் வேண்டாம் கோழிக்கறி தான் வேண்டும் என்று அடம்பிடித்து உள்ளனர்.

படத்தின் இயக்குநர் ராகவேந்திர ராவ் எடுத்துச் சொல்லியும் இருவரும் கேட்காததால் வேறுவழியின்றி, இருவருக்கு மட்டும் அசைவ உணவுகளை ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார்.

படம் வெளிவந்து 18 வருடங்கள் கழித்து இந்தத் தகவலை படப்பிடிப்புக் குழுவினர் வெளியிட, தற்போது ஒட்டுமொத்த ஆந்திராவே பற்றி எரிந்து கொண்டிருக்கிறது இதனைக் கேட்டு.

அது சரி, கோழி ஏன் இவ்ளோ லேட்டா கூவுது..?

 

Post a Comment