ஹைதராபாத்: நாட்டிலேயே ரொம்ப சந்தோஷமான மனிதர் யார் என்று கேட்டால் இப்போதைக்கு அது ராஜமவுலியாகத்தான் இருக்க முடியும். இருக்காதே பின்ன, ஹாலிவுட் படங்களுக்கே சவால் விடும் பாகுபலி படத்தை இயக்கி, வசூல் மழையில் குளித்துவருபவராச்சே.
கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸான பாகுபலி படத்துக்கு டிக்கெட் கிடைக்காமல் ரசிகர்கள் அல்லோகலப்பட்டனர். ரசிகர்களின் இந்த திண்டாட்டம், ராஜமவுலிக்கு கொண்டாட்டம்.
Whoever has done this…:) pic.twitter.com/4ODvJjS7aV
— rajamouli ss (@ssrajamouli) July 8, 2015 ராஜமவுலி தனது டிவிட்டர் அக்கவுண்டில் ஷேர் செய்துள்ள ஒரு போட்டோ இதற்கு உதாரணம். சினிமா காட்சியொன்றில், திரைப்பட டிக்கெட்டுக்காக நீண்ட வரிசையில், மக்கள் காத்திருக்கும் ஒரு போட்டோவை அவர் ஷேர் செய்துள்ளார்.
பின்வரிசையிலிருந்து ஒருவர் வந்து முன்வரிசையில் நிற்பவரிடம், தனக்கும் காதலிக்கும் சேர்த்து டிக்கெட் எடுக்க கேட்டு கெஞ்சுகிறார். இது தகராறில் முடிகிறது. கடுப்பான, முன்வரிசை ஆசாமி சொல்கிறார், ஒரு டிக்கெட் கூட (எனக்கே) கிடைக்கவில்லை என்று. பாகுபலி ஹீரோ பிரபாஸ் நடித்து, ராஜமவுலி இயக்கத்தில் வெளியான சத்ரபதி திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சிதான் இது.
பாகுபலி திரைப்படத்திற்கு, நிஜமாகவே இதே நிலை ஏற்பட்டுள்ளதை படம்போட்டு விளக்கியுள்ளார் ராஜமவுலி.
Post a Comment