மறைந்த மெல்லிசை மன்னர் எம்எஸ் விஸ்வநாதனுக்கு அஞ்சலி செலுத்த பெசன்ட் நகர் மின் மயானத்துக்கு வந்தார் கமல் ஹாஸன்.
எம்எஸ்வி மறைவுக்கு நேற்று அறிக்கை மூலம் இரங்கல் தெரிவித்திருந்தார் கமல் ஹாஸன். அதில் எம்எஸ்வி என்றும் நம்முடனிருப்பார் என்று கூறியிருந்தார்.
இன்று நேரில் அஞ்சலி செலுத்த மயானத்துக்கு வந்தார்.
அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தனக்கு என்ன திறமை இருக்கிறது என்று காட்டிக் கொள்ளத் தெரியாதவர் எம்எஸ்வி. அல்லது அவரையும் அறியாமலேயே அந்தத் திறமை அவரிடம் இருந்திருக்கிறது.
என் மகள் அமெரிக்காவில் இசை பயின்றுவிட்டு, சென்னையில் அவரைச் சந்தித்து ஆசி கோரியபோது, 'எனக்கே எதுவும் தெரியாதேம்மா.. நான் என்ன சொல்லி உன்னை ஆசீர்வதிப்பது?' என்றார். அது வெறும் தன்னடக்கமில்லை. அவரது இயல்பு.
கே பாலச்சந்தருடன் நான் பணியாற்றிய படங்களில் அவரது இசையமைப்பப் பார்த்திருக்கிறேன். மிக நகைச்சுவையாக, பார்க்கவே அத்தனை இனிமையாக இருக்கும் அவர் ரெகார்டிங் செய்த விதம்," என்றார்.
Post a Comment