விமர்சனங்கள் மட்டுமே ஒரு படத்தின் வெற்றியையும் வசூலையும் தீர்மானிப்பதில்லை என்பதற்கு இன்னும் ஒரு எடுத்துக் காட்டு ஜூராசிக் வேர்ல்ட்.
இந்தப் படத்துக்குச் சாதகமான விமரிசனங்கள் கிடைக்கவில்லை என்றாலும் உலகளவில் அதிகம் வசூலித்த படங்களில் இதற்கு 3-ம் இடம் கிடைத்துள்ளது.
படம் வெளியான முதல் மூன்று நாள்களில் மட்டும் ரூ. 3363 கோடியை (524 மில்லியன் டாலர்) வசூலித்தது இந்தப் படம்.
ஜுராசிக் வேர்ல்ட் படத்தின் வசூல் தொடர்ந்து சீராக இருந்ததால், இதுவரை இந்தப் படம் $1.52 பில்லியன் வசூலித்துள்ளது. அதாவது, 9,716 கோடி ரூபாய்!
ஃபியூரியஸ் 7 மற்றும் தி அவெஞ்சர்ஸ் படங்களைத் தாண்டி இப்போது உலகளவில் அதிகம் வசூலித்த 3-வது படம் என்கிற பெருமை ஜூராசிக் வேர்ல்டுக்குக் கிடைத்துள்ளது. இன்னும் அவதார், டைட்டானிக் படங்களின் வசூலைத் தாண்ட வேண்டியதுதான் பாக்கி.
அவதார் படம் ரூ. 17,851 கோடியையும் ($2.79 பில்லியன்) டைட்டானிக் ரூ. 13,948 கோடியையும் ($2.18 பில்லியன்) வசூலித்து முதலிரண்டு இடங்களைப் பிடித்துள்ளன.
ஜூராசிக் வேர்ல்ட் வரிசையின் அடுத்தப் படம் 2018, ஜூன் 22 அன்று வெளியாகும் என யுனிவர்சல் ஸ்டூடியோ அறிவித்துள்ளது.
Post a Comment