நடிகர் சங்கத் தேர்தல்: விடாது விரட்டும் விஷால்... கேவியட் மனு தாக்கல்

|

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்தால், தங்கள் தரப்பில் விளக்கம் கேட்க வேண்டும் என்று நடிகர் விஷால் சென்னை உயர் நீதிமன்றத்தில் "கேவியட்' மனு தாக்கல் செய்தார்.

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமார் அணிக்கும் விஷால் அணிக்கும் மோதல் வெடித்துள்ளது. ஜூலை 15ம் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு விஷால் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Nadigar Sangam polls: Vishal files caveat petition in HC

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலுக்குத் தடை விதிக்கக் கோரியும், ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் தேர்தல் நடத்த உத்தரவிடவும் நடிகர்கள் விஷால், கார்த்தி, நாசர் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

இந்த வழக்கை விசாரணை செய்த உயர் நீதிமன்றம், தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலுக்கு இடைக்காலத் தடை விதித்தது. இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக தற்போதைய தலைவர் சரத்குமார் அறிவித்தார்.

இந்த நிலையில், நடிகர்கள் விஷால், கார்த்தி, நாசர் ஆகியோர் ‘கேவியட் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில், ‘நீதிபதி ரவிசந்திரபாபு பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து எதிர்மனுதாரர் (நடிகர்கள் சங்கம்) மேல்முறையீடு செய்யும்போது அதில் எங்கள் தரப்பிடம் விளக்கம் கேட்காமல் உத்தரவு எதுவும் பிறப்பிக்கக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளனர். இதனால் நடிகர் சங்க தேர்தல் விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.

 

Post a Comment