நடிக்க ஆரம்பிக்கும் முன் கார்த்தி செய்த வேலை உதவி இயக்குநர். சேர்ந்த இடம் இயக்குநர் மணிரத்னம் குழு. வேலை செய்த படம் ஆய்த எழுத்து. சொந்த அண்ணன் சூர்யாதான் ஹீரோ.
அந்தப் படத்தில் சித்தார்த்துக்கு பதில் கார்த்தியைத்தான் நடிக்கச் சொன்னாராம் மணிரத்னம். ஆனால் இயக்குநர் வேலைதான் பிடித்திருக்கிறது என்று கூறி அந்த வேலையில் மணிரத்னத்திடம் பாராட்டுகளையும் பெற்றார்.
இப்போது கிட்டத்தட்ட பத்தாண்டுகள் கழித்து மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க மீண்டும் ஒரு வாய்ப்பு கார்த்திக்கு வந்திருக்கிறது.
ஓகே கண்மணி படத்திற்குப் பிறகு மணிரத்னம் இயக்கும் அடுத்த படத்தில் கார்த்திதான் ஹீரோவாக நடிக்கவிருக்கிறாராம்.
இந்தப் படத்துக்கான வேலைகள் தொடங்கப்பட்டுவிட்டதாம். கார்த்தியை சமீபத்தில் சந்தித்த மணிரத்னம், கதை சொல்லியிருக்கிறார். அதற்கான திரைக்கதை எழுதும் பணிகள் ஆரம்பித்துள்ளனவாம். செப்டம்பரில் இந்தப் படம் தொடங்கக் கூடும் என்கிறார்கள்.
Post a Comment