சென்னை: பாலிவுட் உலகில் பட்டையை கிளப்பி வருகிறது ‘மேரா நாம் மேரி' என்ற குத்துப்பாட்டு. கரீனா கபூரின் நடனத்திற்கு கவர்ச்சிகரமான குரல் கொடுத்திருக்கிறார் நம் ஊர் சின்மயி.
அக்ஷய்குமார் நடிப்பில் வரும் ஆகஸ்ட் பதினைந்துக்கு ரிலீஸ் ஆகப்போகும் ‘பிரதர்ஸ்' படத்தின் டீசராக இந்த பாட்டு இணையத்தில் வெளியாகி, சில நாட்களிலேயே லட்சக்கணக்கனோர் பார்த்து ரசித்திருக்கிறார்கள்.
கரீனாவின் தீயான கவர்ச்சி நடனத்திற்கு வலு சேர்க்கிறது சின்மயியின் போதைக் குரல். பதினைந்து ஆண்டுகளாகப் பாடிவரும் சின்மயி ஏற்கனவே குரு படத்தில் மையா... மையா... என்று பாடி பாலிவுட், கோலிவுட் ரசிகர்களைக் கவர்ந்தார். மென்மையான பாடல்களுக்கு சொந்தக்காரியான சின்மயி, தற்போது மீண்டும் குத்துப்பாடல் மூலம் பாலிவுட் ரசிகர்களைக் கவர்ந்துள்ளார்.
பாலிவுட்டில் இதுவரை எத்தனையோ பாடல்களை அவர் பாடியிருந்தாலும், இந்த பாட்டு பெற்றிருக்கும் அதிரிபுதிரி ஹிட் அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கரீனாவின் ஆட்டம் பாடலுக்கு உயிர் கொடுத்திருக்கிறது என்கிறார் சின்மயி.
ஐட்டம் சாங்குக்கு ஆடப்போகும் நடிகைகள் அத்தனை பேரும் இனிமேல் சின்மயி வாய்ஸுக்குத்தான் ஆடுவேன் என்று கண்டிஷன் போடுமளவுக்கு வட இந்தியா முழுக்க வைரலாகி இருக்கிறதாம்.
குரு, சென்னை எக்ஸ்பிரஸ், டூ ஸ்டேட்ஸ், என பல படங்களில் பாடியிருந்தாலும் இந்த பாடல் செம ஹிட் அடித்துள்ளது இதற்குக் காரணம் இசையமைப்பாளர் கொடுத்த பயிற்சிதான் என்று கூறியுள்ளார் சின்மயி.
Post a Comment