இப்போது ரீமேக், இரண்டாம் பாகம் மற்றும் பேய்ப் பட சீஸன் கோடம்பாக்கத்தில்.
சம்பந்தா சம்பந்தமில்லாமல், இரண்டாம் பாகம் என்ற அறிவிப்போடு படத்தை வெளியிடுவதுதான் பெரும்பாலும் நடக்கிறது.
இன்னொரு பக்கம் பெரும் ஹிட்டடித்த பழைய படங்களை அப்படியே ரீமேக் பண்ணுகிறார்கள். சமயத்தில் அதுவும் ஒர்க் அவுட் ஆகிறது.
பில்லா, நான் அவனில்லை, தில்லு முல்லு படங்கள் ரிமேக்காகி வசூல் குவித்தன. இப்போது நூறாவது நாள், சிகப்பு ரோஜாக்கள் போன்ற படங்களை ரீமேக் செய்து கொண்டிருக்கிறார்கள். அடுத்து கரகாட்டக்காரனை ரீமேக் செய்யப் போவதாக ஒரு பேச்சு.
இதனைக் கேள்விப்பட்ட நடிகை லட்சுமி மேனன், கரகாட்டக்காரனை யார் ரீமேக் செய்தாலும் அதில் கனகா வேடத்தில் நடித்துத் தரத் தயாராக உள்ளதாகக் கூறியுள்ளார்.
பழைய படங்களில் ஏதாவது ஒன்றை ரீமேக் செய்தால், எந்தப் படத்தில் நடிக்க விருப்பம் என்று கேட்டதற்கு, "கரகாட்டக்காரன். அந்தப் படத்தை ரீமேக் செய்யப் போவதாகக் கேள்விப்பட்டேன். அப்படி செய்தால், கனகா வேடத்தில் நடிக்க ஆர்வமாக உள்ளேன்," என்றார்.
Post a Comment