மான்ட்ரீல் உலகப் பட விழாவில் மஜித் மஜிதியின் 'முகமது' திரைப்படம்: இசை ஏ.ஆர்.ரஹ்மான்!

|

மான்ட்ரீல் நகரில் நடக்கும் புகழ்பெற்ற உலகப் பட விழாவில் மஜித் மஜிதி இயக்கியுள்ள முகமது படம் திரையிடப்படுகிறது. அன்றே உலகின் பல நாடுகளிலும் இந்தப் படம் வெளியாகிறது.

பிரபல ஈரானிய இயக்குநர் மஜித் மஜிதியின் இயக்கத்தில் வெளியாகும் புதிய படம் முகமது. நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து இந்தப் படத்தை அவர் உருவாக்கியுள்ளார்.

Majid Majidi’s 'Muhammad' premiere at Montreal Film Fest

கிட்டத்தட்ட ரூ 320 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள படம் இது. ஈரான் திரைப்பட வரலாற்றிலேயே இவ்வளவு பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ள முதல் படம் இது.

190 நிமிடம் ஓடும் இந்தப் படம், நபிகளின் இளமைப் பருவ வாழ்க்கையைச் சொல்கிறது. இதன் அடுத்த இரு பாகங்களும் வரும் ஆண்டுகளில் தயாராக உள்ளன.

படத்துக்கு இசை அமைத்திருப்பவர் ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரஹ்மான்.

ஆகஸ்ட் 27 ம் தேதி தொடங்கி, செப்டம்பர் 7-ம் தேதி வரை மான்ட்ரீல் திரைப்பட விழா நடக்கிறது. இதில் முதல் நாளே முகமது படத்தின் பிரிமியர் காட்சி நடக்கிறது.

 

Post a Comment