பாகுபலியின் சுவாரஸ்யான விஷயங்களுள் ஒன்று, இடைவேளைக்குப் பின் வரும் ஒரு புதிய மொழி.
எங்கய்யா பிடிச்சாங்க இப்படியொரு பாஷையை என பலரையும் கேட்க வைத்த மொழி அது.
இந்த மொழி இந்தப் படத்துக்காகவே உருவாக்கப்பட்டது. கிளிக்கி (Kilikki) என்று பெயர் சூட்டப்பட்ட இந்த மொழியை ராஜமவுலி ஆலோசனையுடன் உருவாக்கியவர் மதன் கார்க்கி. இதனை சென்னையில் நடந்த பாகுபலி பட பிரஸ் மீட்டிலேயே சொன்னார் மதன் கார்க்கி.
இந்த கிளிக்கி மொழியை 750 வார்த்தைகள் மற்றும் நான்கு இலக்கண விதிகளுடன் உருவாக்கியிருக்கிறார் மதன் கார்க்கி.
இந்த மொழியில் ஒரு குறியீடும் கூட எழுத்தாகப் பயன்படுத்தப்படுகிறது. நாக்கை தட்டித் தட்டி ஒருவித ஒலி எழுப்புவார் படத்தில் காலகேயனாக நடித்துள்ள பிரபாகர். அந்த ஒலிக்கு * என்ற குறியீட்டைப் பயன்படுத்தியுள்ளார் மதன் கார்க்கி.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இதுபற்றி ராஜமவுலியும் மதன் கார்க்கியும் பேசி, உருவாக்கிய மொழியாம் இது.
கிளிக்கி மொழியில் சில வாக்கியங்களும், அவற்றின் தமிழர்த்தமும் தெரிந்து கொள்ள ஆசையா.. இதோ.. (க்ளிக்கியில் நான் என்பதை மின் என்றும், நீ என்பதை நிம் என்றும் குறிப்பிடுகிறார் மதன் கார்க்கி)
தமிழ்: இது உண்மையா?
கிளிக்கி: லோர்ஷா - க்வாய்
தமிழ்: ஆயுதங்களைக் கீழே போட்டுட்டு ஓடிப் போயிடு..
கிளிக்கி: நிம் *க்ளெ கடீட்வூ *ட்ட கொரேடா-ஜ்ரா ரெய்ய்.. ஃபூஹூ *க்ளெ
தமிழ் : முட்டாள் மாதிரி பேசாதே..
கிளிக்கி: டம்பாடம்பா ஜிவ்ல பாஹா-ந
போதுமா கிளிக்கி!
Post a Comment