ரஜினி நடிக்கும் புதிய படத்தின் அனைத்து முன் தயாரிப்புப் பணிகளும் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன. இன்னொரு அறிவிப்புடன் ஷூட்டிங் கிளம்பப் போகிறது படக் குழு.
லிங்காவுக்குப் பிறகு ரஜினி நடிக்கும் புதிய படத்தை மெட்ராஸ் படம் தந்த ரஞ்சித் இயக்குகிறார். இது எந்த மாதிரி கதை, ரஜினியின் வேடம் என்ன என்பது குறித்து எந்த தகவலும் கசியாமல் ரகசியம் காக்கிறார்கள்.
படத்தின் தலைப்பு, ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் நாயகி, எங்கே ஷூட்டிங் நடத்துகிறார்கள் போன அனைத்து விஷயங்களும் முடிவு செய்யப்பட்டுவிட்டன.
இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. ஆனால் அதற்கு முன்பே ஊடகங்களில் விஷயம் வெளியாகிவிட்டதால், அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு பெரிய தாக்கம் ஏற்படாமல் போனது.
எனவே படத்தின் தலைப்பு உள்பட எந்த விஷயத்தையும் வெளியிடாமல் வைத்துள்ளனர். ஆகஸ்ட் முதல் வாரம் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு மீண்டும் ஒரு அறிவிப்பை வெளியிடுவார் என்று தெரிகிறது.
Post a Comment