தூங்காவனத்தில் கமலுக்கு ஜோடியான ஆஷா சரத்!

|

ஆஷா சரத்... பாபநாசம் படத்தில் போலீஸ் அதிகாரியாக வந்து அழகு, நடிப்பு, கம்பீரம் என அனைத்திலும் கலக்கினாரே ஒரு பெண்... நினைவிருக்கிறதா?

அவர் இப்போது தூங்காவனம் பட நாயகி. ஆம்.. பாபநாசத்தில் கமலை போட்டு சித்திரவதை செய்யும் பாத்திரம் அவருக்கு. ஆனால் இப்போது அதே கமலுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

Asha Sarath is Kamal's new pair

பாபநாசம் படத்துக்குப் பிறகு கமல்ஹாசன் தூங்காவனம் படத்தை ஆரம்பித்தார். இந்தப் படத்தில் கமலுடன் த்ரிஷா, மது ஷாலினி, பிரகாஷ்ராஜ், கிஷோர் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை படப்பிடிப்பு நடத்தும்போதே வெளியிட்டார் கமல்.

படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் ஹைதராபாதிலும், 2-ம் கட்ட ஷூட்டிங் சென்னையில் நடைபெற்றுள்ளது. இப்போதும் சென்னையில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

Asha Sarath is Kamal's new pair

இந்தப் படத்தில் கமலுக்கு ஜோடி முதலில் செய்திகள் வெளியாகின. ஆனால் இப்போது கமலுக்கு ஜோடியாக நடிப்பவர் ஆஷா சரத் என்று தெரியவந்துள்ளது.

 

Post a Comment