பழனியிலே கலகம்... இது 'மல்லிகாக்களின்' ஆட்டோகிராப்!

|

ஒரு நடிகை சினிமா உலகிலும், அதற்கு வெளியிலும் என்ன பாடு படுகிறாள் என்பதை முழுமையாக யாரும் எழுதியதில்லை, சொன்னதுமில்லை.

அப்படி யாராலும் முழுமையாகச் சொல்ல முடியாத ஒன்றை படமாக எடுக்கிறார் ஒரு நடிகை. அவர் மல்லிகா. ஆட்டோகிராப் நாயகிகளில் ஒருவர்.

தமிழில் ஆட்டோகிராபில் நாயகியாக நடித்தாலும், அடுத்தடுத்து அமைந்த விஜய், அஜீத் படங்களில் அவரை தங்கை கேரக்டரில் நடிக்க வைத்து 'டீ ப்ரமோட்' செய்துவிட்டனர். அம்மணி கவர்ச்சிக்கு எப்போதுமே சிவப்புக் கொடி என்பதால் வேறு நல்ல வாய்ப்புகள் அமையவில்லை.

Autograph Mallika turns film director

எனவே துளு படம் ஒன்றில் நடித்தார். அது தேசிய விருதே பெற்றது. பின்னர் மலையாளத்தில் நடிக்க, உதவி இயக்குநராக வேலைப் பார்க்க ஆரம்பித்தார்.

இப்போது மலையாளத்தில் படம் இயக்கப் போகிறார். திரையுலகில் நடிகைகள் உடலளவிலும், மனதளவிலும் எந்த அளவிற்கு துன்புறுத்தப்படுகிறார்கள் என்பதே படத்தின் கதை. சினிமாவுக்கு வெளியில் சமூக வலைத் தளங்கள், வாட்ஸ்ஆப் குழுக்களில் நடிகைகள் படும் பாட்டையும் இந்தப் படத்தில் சொல்லப் போகிறாராம்.

படத்துக்கு தலைப்பு பழனியிலே கலகம். நாயகியாக நடிக்கப் போகிறவர் பாவனா!

 

Post a Comment