அறிமுகப்படுத்திய கலைப்புலி தாணுவுக்கே 'கடுக்கா கொடுத்த' இயக்குநர்!

|

அறிமுகப்படுத்தியவர்களுக்கு அல்வா கொடுப்பது திரையுலகில் புதிய விஷயமில்லை. அடிக்கடி பார்க்கிற, படிக்கிற சமாச்சாரம்தான்.

அதுவும் கலைப்புலி தாணு விஷயத்தில் அடிக்கடி இப்படி நடந்துவிடுவதுண்டு. லேட்டஸ்ட் அரிமா நம்பி இயக்குநர் ஆனந்த் ஷங்கர்.

Kalaipuli Thanu irked on director Anand Shankar

கடந்த ஆண்டு இந்தப் படம் வெளியானது. விக்ரம் பிரபு - ப்ரியா ஆனந்த் நடித்த இந்தப் படம் ஓரளவுக்குப் போனது. உடனே அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பையும் ஆனந்த் ஷங்கருக்கு அளித்தார் தாணு. விக்ரம் - ப்ரியா ஆனந்த் ஜோடி.

படப்பிடிப்புக்குக் கிளம்ப ஒரு மாதம் இருக்கையில், படத்திலிருந்து ப்ரியா ஆனந்த் வெளியேறினார். அடுத்த சில நாட்களில், கலைப்புலி தாணுவுக்கே தெரியாமல் இந்தப் படத்தை அய்ங்கரனுக்கு செய்து தர அக்ரிமென்ட் போட்டுவிட்டாராம் ஆனந்த் ஷங்கர்.

ஷாக்கான தாணு கணக்கு வழக்குப் பார்த்ததில், இன்னும் படப்பிடிப்பே ஆரம்பிக்காத நிலையில் இந்தப் படத்துக்காக ரூ 2 கோடியை செலவழித்திருப்பதைக் கண்டாராம்.

"தம்பி நீ தாராளமா யாருக்கு வேணா படம் பண்ணிக்கோ.. அதுக்கு முன்ன இந்தப் படத்துக்காக நான் கொடுத்த ரூ 2 கோடியை எடுத்து வச்சிடுப்பா" என்று சொல்லிவிட்டாராம்.

படம் இன்னும் தொடங்கியபாடில்லை!

 

Post a Comment