சென்னை: சின்ன நம்பர் நடிகை அரசியலில் குதிக்க திட்டமிட்டுள்ளார் என்று செய்தி வெளியாகியுள்ளது.
சின்ன நம்பர் நடிகை திருமணம் நின்ற பிறகு பட வேலைகளில் பிசியாக உள்ளார். நல்ல துணை கிடைத்தால் நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன் என்று நடிகை தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவர் அரசியலில் குதிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே 32 வயதாகிவிட்டது, வயது ஆக ஆக வாய்ப்புகள் குறைந்துவிடும் என்று நினைக்கிறாராம் நடிகை. மும்பை, கேரளாவில் இருந்து கோலிவுட்டுக்கு ஏராளமான நடிகைகள் வந்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் தான் நம்பர் நடிகையின் கவனம் அரசியல் பக்கம் திரும்பியுள்ளதாம்.
அரசியல் பக்கம் செல்ல விரும்பும் நடிகை ஆளுங்கட்சியில் சேர முடிவு செய்துள்ளாராம். அம்மா பிள்ளையான நடிகை ஆளுங்கட்சியில் சேரலாம் என்று இருக்கிறாராம். அதிலும் சட்டசபை தேர்தலுக்கு முன்பே அவர் அந்த கட்சியில் சேரக்கூடும் என்று கூறப்படுகிறது.
நடிகைகள் அரசியலுக்கு வருவது ஒன்றும் புதிது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment