பாக்ஸ் ஆபிஸில் சல்மானின் பஜ்ரங்கி பைஜானை கவிழ்த்தது பாகுபலி

|

மும்பை: 2015 ன் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற படம், சல்மானின் மிகச்சிறந்த படங்களில் ஒன்று மற்றும் பாக்ஸ் ஆபிசில் சல்மானின் இரண்டாவது மிகப்பெரிய படம். இவ்வளவு விஷயங்கள் இருந்தும் கூட பாக்ஸ் ஆபிஸ் வசூலில் பாகுபலியின் அருகில் கூட நெருங்கவில்லை சல்மானின் பஜ்ரங்கி பைஜானால்.

ஆமாம் இந்தியாவில் வெளியான முதல் நாளே அதிகம் வசூலித்த திரைப்படம்(50கோடி) என்ற பெருமையைப் பெற்று இருக்கிறது ராஜமௌலியின் பாகுபலி திரைப்படம், இதற்கு முன்னால் ஷாரூக்கானின் ஹேப்பி நியூ இயர் திரைப்படம் தான் முதல் நாளில் அதிகம் வசூலித்த திரைப்படமாக (44.97 கோடி) இருந்தது.

'Bajrangi Bhaijaan' Becomes Highest Opener of 2015 but Fails to Beat 'Baahubali'  Record

ஷாரூக்கானின் சாதனையை பாகுபலி முறியடித்தது. ஆனால் பாகுபலியின் சாதனையை முறியடிக்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, பஜ்ரங்கி பைஜான் திரைப்படம் முதல் நாளில் வெறும் 27.25 கோடியை மட்டுமே வசூலித்தது.

இதுவரை இந்திய அளவில் இந்தித் திரைப்படங்களே முதல் நாள் வசூலில் சாதனைகளைச் செய்து வந்தன, ஆனால் முதன்முறையாக ஒரு தென்னிந்தியத் திரைப்படம்(பாகுபலி) முதல் நாள் வசூலில் மாபெரும் சாதனையை நிகழ்த்தி இருக்கிறது.

பாகுபலியின் வசூல் ரெக்கார்டை மற்ற படங்கள் முறியடிக்க இன்னும் பல ஆண்டுகள் ஆகலாம், அல்லது முறியடிக்காமலும் போகலாம் எது எப்படியோ தென்னிந்தியத் திரைப்படம் ஒன்று இந்த சாதனையை நிகழ்த்தி இருப்பதில் அனைவருக்கும் மகிழ்ச்சியே.

 

Post a Comment