பாட்ஷா என்கிற ஆன்டனி என்ற தலைப்பு கிடைக்காததால், அதை புரூஸ் லீ என்று மாற்றியுள்ளார் ஜிவி பிரகாஷ்.
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா', ‘பென்சில்' ஆகிய படங்கள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது.
இந்நிலையில், இயக்குனர் பாண்டிராஜின் உதவியாளர் பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஜி.வி.பிரகாஷ் ஒப்பந்தமானார்.
இந்த படத்திற்கு முதலில் ரஜினி நடித்த ‘பாட்ஷா' என்ற படத்தலைப்பை வைத்தனர். ஆனால் அது ரஜினி ரசிகர்களால் பலமாக எதிர்க்கப்பட, ‘பாட்ஷா என்கிற ஆண்டனி' என்று வைக்க முடிவு செய்திருந்தனர்.
ஆனால், இந்தத் தலைப்பை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பதிவு செய்து வைத்திருப்பதால், அவர்களிடமிருந்து இந்த தலைப்பை பெற முயற்சிகள் மேற்கொண்டு வந்தனர். ஆனால், அது முடியவில்லை.
எனவே, தற்போது இப்படத்தின் தலைப்பை ‘புருஸ் லீ' என்று மாற்றி வைத்துள்ளனர்.
Post a Comment