சென்னை: ஒரே படத்தில் ஓஹோ என உயர்ந்தவர் இந்த ரிப்பன் நடிகை. அடுத்தடுத்து சொல்லிக் கொள்ளும் படி வெற்றிப் படங்கள் தராவிட்டாலும், முதல் பட வெற்றி இன்னமும் நடிகையோடு ஒட்டிக் கொண்டு தான் இருக்கிறது.
இதனால் கை நிறையப் படங்களோடு நடிகை உலா வருகிறார். எனவே, நடிகையைப் பேட்டி எடுக்க நினைத்து யாராவது போன் செய்தால், தாய்க்குலம் தான் பேசுகிறார்.
பேட்டி தானே தந்து விடலாம் எனப் பேசும் தாய்க்குலம், பின்னர் மெதுவாக, ‘அப்படியே நம்ம வீட்ல இன்னொரு நடிகை இருக்காங்க, அவங்களையும் பேட்டி எடுக்குறீங்களா?' என தூண்டில் போடுகிறாராம்.
ஆம், நடிகையின் அக்காவும் ஒரு நடிகை தான். ஆனால், தங்கை அளவிற்கு பிரபலம் இல்லை.
எனவே, தங்கையைப் போலவே அக்காவையும் தமிழில் முன்னணி நாயகிகளுள் ஒருத்தராக ஆக்கியே தீருவது என தாய்க்குலம் சபதம் எடுத்து செயல்பட்டு வருகிறாராம்.
கண்ணா ரெண்டாவது லட்டு தின்ன ஆசையா!
Post a Comment