கேட்கிற சம்பளத்தை கொடுங்க, இல்லாட்டி நடையை கட்டுங்க: நம்பர் நடிகை பொளேர்

|

சென்னை: நம்பர் நடிகை அண்மை காலமாக ஹிட் கொடுக்காதபோதிலும் சம்பளத்தை மட்டும் குறைக்க மாட்டேன் என்கிறாராம்.

நம்பர் நடிகை பிக்கப் டிராப் நடிகருடன் சேர்ந்து நடித்த படத்தை அடுத்து அவர் நடிப்பில் வெளியான படங்கள் எதுவும் ஹிட்டாகவில்லை. இருப்பினும் நம்பர் நடிகைக்கு மார்க்கெட்டில் மவுசு மட்டும் குறையவில்லை.

Number actress not ready to reduce remuneration

ஹீரோக்களோ, நம்பர் நடிகையை ஜோடியாக்குங்கள் என்று இயக்குனர்களிடம் தெரிவித்து வருகிறார்கள். தனக்கு இன்னும் அதிக மவுசு இருப்பதை தெரிந்து கொண்ட நம்பர் நடிகை ஹிட் கொடுக்காவிட்டாலும் சம்பளத்தை மட்டும் குறைக்க தயாராக இல்லையாம்.

ஹிட்டே கொடுக்காமல் உள்ளாரே இவருக்கு இப்படி கொட்டிக் கொடுத்து நடிக்க வைக்க வேண்டுமா என்று தயாரிப்பாளர்கள் சற்று தயங்குகிறார்களாம். ஆனால் அம்மணியோ இந்தா பாருங்க உங்கள் படத்தில் நான் நடிக்க வேண்டும் என்றால் நான் கேட்கும் சம்பளத்தை கொடுங்கள், இல்லை என்றால் நடையை கட்டுங்கள் என்று தில்லாக கூறுகிறாராம்.

அவர் பேசும் தோரணையைப் பார்த்து தயாரிப்பாளர்களே அசந்து நிற்கிறார்களாம்.

 

Post a Comment