சென்னை: அண்ணன் இயக்குனரை கண்டால் ஹீரோக்கள் தெறித்து ஓடுகிறார்களாம்.
இயக்குனர் அண்ணன் தான் எடுக்கும் படங்களில் எல்லாம் தனது தம்பியை ஹீரோவுக்கு இணையான கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து வருகிறார். அந்த தம்பியை கழற்றிவிட்டுவிட்டு படம் எடுக்க மாட்டீர்களா என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி கேட்டு வருகிறார்கள்.
அண்ணன் இயக்கத்தில் கடைசியாக வெளியான இரண்டு படங்களும் ஓடவில்லை. இதனால் இயக்குனர் கவலையில் உள்ளாராம். இருக்கட்டும் அடுத்த படத்தை நல்லபடியாக எடுத்து ஹிட்டாகிவிட வேண்டும் என்று முடிவு செய்துள்ளாராம் இயக்குனர்.
தான் எடுக்கும் அடுத்த படத்தில் தம்பியை நடிக்க வைக்க வேண்டாம் என்று தீர்மானித்துள்ளாராம். இந்நிலையில் அவர் ஹீரோக்களுக்கு போன் செய்தால் யாரும் அவரை கண்டுகொள்வது இல்லையாம். அவர் இயக்கத்தில் நடிக்க ஆசையாக உள்ளது என்று தெரிவித்த ஹீரோக்கள் கூட தற்போதை அவரை கண்டும் காணாமல் செல்கிறார்களாம்.
இந்நிலையில் இயக்குனர் இரண்டு வாரிசு நடிகர்களை அணுகி பேசியுள்ளாராம். ஆனால் அவர்களும் நடிக்கிறோம், இல்லை என்று தெளிவாகக் கூறாமல் இழுத்தடித்து வருகிறார்களாம்.
Post a Comment