சென்னை: தமிழ் சினிமாவில் யுவன்ஷங்கர் ராஜா ஓரம் கட்டப்படுகிறாரா என்ற சலசலப்பு எழுந்துள்ளது.
ஒரு நேரத்தில் இசையமைக்க முடியாத அளவுக்கு கைநிறைய படங்களுடன் இருந்த யுவன் கையில் இன்று ஒரு சில படங்கள் மட்டுமே உள்ளன.
இதுவரை 100 படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை புரிந்தாலும் சமீப காலமாக சொல்லிக் கொள்ளும்படியான படங்கள் எதுவும் யுவன் கைவசம் இல்லை என்கிறார்கள்.
16 வயதில் இசையமைப்பாளராக
16 வயதில் மற்ற சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருக்கும் வேளையில், யுவன்ஷங்கர் ராஜா அரவிந்தன் படத்திற்கு இசையமைத்து இளம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தார்.
துள்ளுவதோ இளமை
அதற்கு முன்பு நிறைய படங்களுக்கு இசையமைத்து இருந்தாலும் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தான் ஒரு நல்ல பிரேக் கிடைத்தது. தொடர்ந்து இவர் இசையமைத்து வெளிவந்த நந்தா, 7 ஜி ரெயின்போ காலனி, மன்மதன், அறிந்தும் அறியாமலும், காதல் கொண்டேன், யாரடி நீ மோகினி, பருத்தி வீரன் போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக மாறினார்.
செல்வராகவன் - யுவன்ஷங்கர் கூட்டணி
துள்ளுவதோ இளமையில் தொடங்கிய இந்த இருவர் கூட்டணி தொடர்ந்து காதல் கொண்டேன், புதுப்பேட்டை, யாரடி நீ மோகினி, 7ஜி ரெயின்போ காலனி போன்ற படங்கள் வரை நீடித்தது. இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் பிரிந்தனர்.
மீண்டும் இணைத்த கான்
7 வருடங்கள் கழித்து செல்வராகவன் சிம்புவை வைத்து இயக்கும் கான் படத்தின் மூலம் செல்வராகவன்-யுவன் கூட்டணி ஒன்று சேர்த்து உள்ளது.
தொடரும் சர்ச்சைகள்
ஏற்கனவே இரண்டுமுறை திருமணம் செய்து அதிலிருந்து மீண்டு வந்த யுவன் மூன்றாவது திருமணத்தில், முஸ்லீமாக மாறி முஸ்லீம் பெண்ணை மணந்துள்ளார்.
பிரியாணி 100 வது படம்
யுவனின் சகோதரர் வெங்கட் பிரபுவின், பிரியாணி படம் யுவனின் 100 வது படமாக அமைந்தது.
சரியும் மார்க்கெட்
யுவன் இசைத்துறையில் அடியெடுத்து வைத்து 19 ஆண்டுகள் முடிந்து விட்டன. 2002ல் தொடங்கி 2013 வரை வருடத்திற்கு சுமார் 8 படங்கள் சில நேரங்களில் அதற்கும் மேற்பட்ட படங்கள் என்று படங்களுக்கு இடைவிடாது இசையமைத்து வந்த யுவன் 2014 l ல் வெறும் 3 படங்களுக்கு மட்டுமே இசையமைத்து இருக்கிறார்.இந்த வருடம் இவர் இசையமைத்து வெளிவந்த ஒரே படம் மாசு மட்டும் தான்.
மீண்டும் செல்வராகவன்- ரசிகர்கள் மகிழ்ச்சி
கான் படத்தின் மூலம் மீண்டும் செல்வராகவனுடன் இணைந்து விட்டார், இனி யுவன் பார்முக்குத் திரும்பி விடுவார் என்று ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் திளைக்கின்றனர்.
வருத்தத்தில் யுவன்
ஆனால் யுவன் மட்டும் வருத்தத்தில் இருக்கிறார் ஏனெனில் இவருடன் இணைந்து பணியாற்றிய இயக்குநர்கள் வேறு இசையமைப்பாளரை ஒப்பந்தம் செய்து வருகின்றனர். அமீர், ஹரி, வசந்த், பாண்டிராஜ், சுசீந்திரன், சீனு ராமசாமி எனப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
இதனால் வருத்தத்தில் ஆழ்ந்து இருக்கிறாராம் யுவன். நடப்பதை வைத்துப் பார்க்கும்போது தமிழ்த் திரையுலகில் ஓரங்கட்டப்படுகிறாரா யுவன் என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
Post a Comment