திருமணமே வேண்டாம் – சுருதிஹாசன் அதிரடி

|

சென்னை: தமிழ், தெலுங்கு, இந்தி என்று மூன்று மொழிகளிலும் கொடிகட்டிப் பறக்கும் நடிகை சுருதிஹாசன், தனது வாழ்க்கையில் திருமணமே செய்து கொள்ளப் போவதில்லை என்று கூறியிருக்கிறார்.

Shruti Answered About Her Marriage

நடிகர் கமலஹாசனின் மகளும் பிரபல நடிகையுமான சுருதிஹாசன் தற்போது தமிழில் அஜீத்துடன் தல 56, விஜயுடன் புலி, தெலுங்கில் மகேஷ்பாபு வுடன் ஸ்ரீமந்துடு, இந்தியில் அணில் கபூருடன் வெல்கம் பேக், யாரா, ராக்கி ஹேண்ட்சம் போன்ற படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

Shruti Answered About Her Marriage

மூன்று மொழிகளிலும் இவர் நடித்த படங்கள் ஹிட்டடிக்க தற்போது சுருதியின் காட்டில் தான் அடைமழை பொழிந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், வாழ்க்கையில் திருமணம்செய்து கொள்ளும் எண்ணமே இல்லை அதிரடியாக மனந்திறந்து கூறியிருக்கிறார்.

Shruti Answered About Her Marriage

சுருதியின் பதிலில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை, ஏனெனில் அவரின் பெற்றோர்கள் பிரிவை சிறுவயதில் பார்த்ததால் தான் இந்த முடிவை எடுத்திருக்கிறார். பணம், புகழ் எல்லாம் இருந்தும் கூட பெற்றோர்கள் பிரிந்ததுதான் சுருதி திருமண வாழ்வில் இந்த முடிவை எடுக்கத் தூண்டியிருக்கிறது போலும்.

 

Post a Comment