அப்துல் கலாம் தனி மனிதர் அல்ல.. தமிழரின் அடையாளம்!- பாரதிராஜா, சிவகுமார் புகழாரம்

|

டாக்டர் அப்துல் கலாம் தனி மனிதர் அல்ல, தமிழரின் அடையாளம், இளைஞர்களின் உந்து சக்தி என்று இயக்குநர் பாரதிராஜா, நடிகர் சிவகுமார் ஆகியோர் புகழஞ்சலி செலுத்தினர்.

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமுக்கு இயக்குநர் பாரதிராஜா செலுத்திய புகழஞ்சலி:

Director Bharathiraja and Actor Sivakumar hailed Abdul Kalam

இந்தியாவின் வல்லமையை உலக நாடுகளுக்கு எடுத்துச் சென்ற ஒப்பற்ற தலைமகனின் மறைவு கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவருடைய மறைவு தமிழர்களுக்கும், இந்திய மாணவ சமூகத்திற்கும், ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். திரு. அப்துல் கலாம் அவர்கள் தனி மனிதர் அல்ல.. தமிழனின் அடையாளம். ஆழ்ந்த வருத்தங்களுடன்...

-பாரதிராஜா.

-என்று குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் சிவகுமாரின் புகழஞ்சலி:

உண்மை, நேர்மை, திறமை, கடும் உழைப்பு , நாட்டுப்பற்று இருந்தால் ஒருவன் எந்த குக்கிராமத்தில் பிறந்தாலும் எவ்வளவு ஏழையாகப் பிறந்தாலும் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் நாட்டில் உயர்ந்த பதவியைப் பெற முடியும். உன்னத நிலையை அடைய முடியும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்தவர் டாக்டர் அப்துல் கலாம்.

பதவியில் இருந்த போதும் பதவியில் இல்லாத போதும் உலக மக்களால் ஒன்றுபோல் நேசிக்கப் பட்ட மகான் !

இளைஞர்களின் உந்து சக்தியாக இறுதி மூச்சு வரை வாழ்ந்த அற்புத மனிதர்!

-இவ்வாறு நடிகர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.

 

Post a Comment