சென்னை: அறிமுக இயக்குநர் ஸ்ரீ நாத் ராமலிங்கம் இயக்கி வந்த திகில் படமான டெய்சி திரைப்படம், தற்போது உனக்கென்ன வேணும் சொல்லு டெய்சி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் மீண்டும் பேய்ப் படங்களை கொண்டு வந்தே தீருவேன் என்ற நோக்கத்துடன் இயக்குநர் ஸ்ரீநாத் ராமலிங்கம் இந்தப் படத்தை இயக்கிக் கொண்டு இருக்கிறார்.
ஒரு தந்தைக்கும் மகளுக்கும் இடையே நடக்கும் சம்பவங்களே படத்தின் கதை என்கிறார்கள், அதாவது கருவில் இருக்கும் தன் குழந்தைக்கு ஒரு வாக்குறுதியை அந்த சிசிவின் தந்தை அளிக்கிறார். தந்தையின் வாக்குறுதியை அவரால் காப்பாற்ற முடியாமல் போக கருவிலிருக்கும் அந்தக் குழந்தை இறந்து ஆவியாகி, தன்னுடைய நிலைமைக்கு காரணமானவர்களைபழிவாங்குவதுகின்றது.
சிலபல உண்மை சம்பவங்களின் தொகுப்புகள் தான் படத்தின் கதை, தலைப்பு எல்லோருக்கும் புரியும்படி இருக்க வேண்டும் என்று தான் படத்தின் தலைப்பை உனக்கென்ன வேணும் டெய்சி என்று மாற்றியதாக இயக்குநர் கூறியுள்ளார்.
தீபக் பரமேஷ், ஜாக்லின் பிரகாஷ், மைம் கோபி ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படத்தை ஜுனா பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரித்துள்ளது. படத்தின் ஒளிப்பதிவை புதுமுகம் மனிஷ் யாதவ் கவனித்துக் கொள்ள, படத்திற்கு இசையமைத்து தமிழ்த் திரையில் காலடி எடுத்து வைக்கிறார் இசையமைப்பாளர் சிவ சரவணன்.
ஆகஸ்ட் மாதம் இறுதியில் படம் திரையைத் தொட உள்ளது, பேய்கிட்ட போய் உனக்கென்ன வேணும் டெய்சின்னு எல்லோரும் கேட்பாங்களோ?
Post a Comment