கைராசிக்குடும்பத்தை கலைக்க துடிக்கும் பானு, வைஜெயந்தி… விடுவாளா மீனாட்சி

|

கூட்டுக்குடும்பத்தை எப்படி சிதைப்பது... அண்ணன் தம்பிகளை எப்படி அக்குவேறு ஆணி வேறாக பிரிப்பது, இதுதான் இன்றைக்கு சீரியல்களின் முக்கிய கதைக்கருவாக இருக்கிறது.

இன்றைக்கு பத்தில் 8 வீடுகள் தனிக்குடும்பங்கள். ஒரு சிலர்தான் மாமனார், மாமியார் மச்சினர், கொழுந்தனார் ஓரகத்திகளுடன் வசிப்பது ஏதோ அதிசயமான நிகழ்வாக இருக்கிறது.

டிவி சீரியல்களில்தான் இத்தகைய கூட்டுக்குடும்பங்களைப் பார்க்க முடிகிறது. முதல் சில எபிசோடுகள் சந்தோசமாக தொடங்கினாலும் சில வாரங்களிலேயே பழிவாங்குதல், கூட இருந்தே குழி பறித்தல் என நச்சு பிச்சுகள் ஆரம்பித்து விடுகிறது.

Karasi kudumbam on Jaya TV

கைராசி குடும்பம்

அழகான அம்மா, நான்கு பையன்கள் என பூந்தோட்டமாய் இருக்கும் கைராசி குடும்பத்தின் மூத்த மருமகள் மீனாட்சி. சிவஞானத்தின் மனைவி மீனாட்சியை கொழுந்தன்கள் மூவருக்கும் ரொம்ப பிடிக்கிறது. தென்றல் வீசும் குடும்பத்தில் அடுத்து வரும் மருமகள்கள் பானு, வைஜெயந்திக்கு பிடிக்காமல் போகிறது.

அண்ணன் தம்பி பாசம்

அண்ணன் தம்பிகளை பிரித்து குடும்பத்தை சிதைப்பதுதான் பானுவின் திட்டம், அதே எண்ணத்தோடு திட்டமிட்டு சிவஞானத்தின் இரண்டாவது தம்பி ராஜேந்திரனை திருமணம் செய்து கொண்டு வருகிறாள் வைஜெயந்தி.

Karasi kudumbam on Jaya TV

பானு - வைஜெயந்தி

பானுவுடன் இணைந்து குடும்பத்தை சீரழிக்க வைஜெயந்தி திட்டமிட்டாலும் முதல் ஆப்பு பானுவுக்குத்தான் வைக்கப் போகிறார். காரணம் வைஜெயந்தி காதலித்தது சண்முகத்தை. திடீரென்று பானுவை திருமணம் செய்து வைத்து விட வேறு வழியின்றி ராஜேந்திரனை மணந்து கொண்டு கைராசி குடும்பத்தின் மருமகளாக அடியெடுத்து வைக்கிறாள்.

Karasi kudumbam on Jaya TV

திருமணம் நடக்குமா?

பானுவும், வைஜெயந்தியும் இணைந்து போடும் திட்டங்கள் பலிக்கிறதா? மீனாட்சி அதை எப்படி முறியடிக்கிறாள். கடைசி கொழுந்தனின் திருமணம் நடக்குமா? என்பதை இனிவரும் எபிசோடுகளில் காணலாம்.

Karasi kudumbam on Jaya TV

சிவா - சுபத்ரா

ஜெயா டி.வியில் ஒளிபரப்பாகி வரும் கைராசி குடும்பம் தொடரை திருச்செல்வம் இயக்கி வருகிறார். நடிகர் சிவா மூத்த அண்ணன் சிவஞானமாக நடிக்க மூத்த மருமகள் மீனாட்சியாக நடிக்கிறார் சுபத்ரா.

வில்லி வித்யா

நிறைய கதாபாத்திரங்கள் தொடரில் இருந்தாலும் தனது வில்லத்தனமான கேரக்டரில் நடித்து பெயரை தட்டிக் கொண்டிருக்கிறார் ஸ்ரீவித்யா.

Karasi kudumbam on Jaya TV

வித்யாசமான ஸ்ரீ வித்யா

தென்றல், சித்திரம் பேசுதடி உள்ளிட்ட பல தொடர்களில் வில்லியாகத்தான் நடித்திருந்தார். கைராசி குடும்பத்திலும் வில்லி கேரக்டர்தான். தென்றல், பொன்னூஞ்சல் போன்று கைராசி குடும்பமும் ஸ்ரீவித்யாவின் பெயர் சொல்லும் குடும்பமாக இருக்கும் என்று நம்புகிறார்.

மனதில் நிற்கும் வில்லி

கூட்டுக் குடும்பங்களில் அன்றன்றைய மனநிலையே வில்லத்தனமாக அமையும். அது மாதிரி அடிக்கடி வில்லத்தனம் செய்யும் கேரக்டர் என்னுடையது. எனது பார்வையில் சரி என்று படுகிற விஷயங்கள் மற்றவர்களுக்கு வில்லத்தனமாக தெரியும். இல்லத்தரசிகளிடம் திட்டு வாங்கினாலும் அவர்கள் மனதில் பதிவது வில்லி வேடங்கள்தான் என்கிறார் ஸ்ரீவித்யா. வில்லி சொன்னா சரியாத்தான் இருக்கும்.

 

Post a Comment