சென்னை: தமிழ் சினிமாவில் பெரும்பான்மையான நாயகிகளின் தற்போதைய ஆசையாக பேய் கதாபாத்திரமாகவே இருக்கிறது, எல்லா நடிகைகளும் தற்போது பேய் வேடங்களில்நடித்து புகழ் பெறவேண்டும் என்று ஆசைப்படத் தொடங்கி இருக்கிறார்கள்.
ஏற்கனவே நடிகை நயன்தாரா மாயா படத்தில் பேயாக நடித்துக் கொண்டு இருக்கிறார், ஹன்சிகா மற்றும் த்ரிஷா ஆகியோர் அரண்மனை 2 படத்தில் பேயாக மாறியிருக்கின்றனர்.
தற்போது அந்த வரிசையில் புதிதாக நடிகை லட்சுமி மேனனும் இணைந்து விட்டார், ஆமாம் ஜெயம் ரவியுடன் லட்சுமி மேனன் நடித்து வரும் புதிய படமொன்றில் பேயாக நடிக்கிறாராம்.
காமெடி + திகில் என இரண்டும் சரிவிகிதத்தில் கலந்த கலவையாக இந்தப் படம் இருக்குமென்று கூறுகிறார்கள், தொடர்ந்து கிராமத்துக் கதைகளிலேயே நடித்து வந்த லட்சுமி மேனன் தற்போது வித்தியாசமான வேடங்களில் நடிக்கத் தொடங்கி இருக்கிறார்.
நாய்கள் ஜாக்கிரதை படத்தை இயக்கிய சக்தி சவுந்தர் ராஜன் இயக்கி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் நடந்து முடிந்திருக்கிறது, அடுத்த கட்ட படப்பிடிப்புகள் சென்னை மற்றும் ஹைதராபாத் பகுதிகளில் நடக்க இருக்கிறது.
ஏற்கனவே அஜீத் படத்தில் மாடர்ன் உடைகளை அணிந்து நடிக்கத் தொடங்கிய லட்சுமி தற்போது பேயாக அவதாரம் எடுத்து இருக்கிறார். இன்னும் எத்தனை அவதாரங்களை எடுக்கப் போகிறாரோ? தெரியவில்லை.
Post a Comment