தூர்தர்சனில் ஒளிபரப்பான வயலும் வாழ்வும் தொடங்கி நேயர் விருப்பம் வரை கல்லூரி கலைநிகழ்ச்சிகளில் கிண்டலடிப்பார்கள். ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பான சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை விஜய் டிவியின் அது இது எது நிகழ்ச்சியில் கிண்டலடித்து ஒளிபரப்பினார்கள். இந்த நிகழ்ச்சி வைரலானது.
இதை வைத்து பாடல்கள் எழுதினார்கள். எழுதப்பட்ட வசனங்கள் வைரலானது. தற்போது புது யுகம் டிவியில் டிவி நிகழ்ச்சிகளை கிண்டலடித்து ‘இப்படி பண்றீங்களேம்மா?' என்ற நிகழ்ச்சியை தயாரித்துள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் அதிகமாக விஜய் டிவி நிகழ்ச்சிகளைத்தான் கிண்டலடிக்க இருக்கின்றனராம். உங்களில் யார் அடுத்த பிரபுதேவா?, சூப்பர் சிங்கர், காபி வித் டிடி ஆகிய நிகழ்ச்சிகளையும், மானாட மயிலாட நிகழ்ச்சியையும் கிண்டலடித்து இருக்கின்றனராம்.
ஒவ்வொரு ஞாயிறன்றும் காலை 10 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. அரவிந்தராஜ், விக்னேஷ், சபரி ஆகியோர் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகின்றனர்.
பேசாம லட்சுமி ராமகிருஷ்ணனையே இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வைத்திருக்கலாமே..
Post a Comment