சென்னை: அர்னால்டின் நடிப்பில் இன்று வெளிவந்திருக்கும் டெர்மினேட்டர் ஜெனிசிஸ் படம், தமிழ்நாட்டில் மிகக் குறைந்த அளவே வரவேற்பைப் பெற்றுள்ளது. பாபநாசம் மற்றும் பாலக்காட்டு மாதவன் இரு படங்களும் நன்றாக இருப்பதால், மக்கள் ஹாலிவுட் படங்களை விட்டு தமிழ்ப் படங்களை பார்க்க ஆரம்பித்துள்ளனர்.
முந்தைய பாகங்களை விட படம் நன்றாக வந்திருக்கிறது, அர்னால்டின் நடிப்பில் படம் சூப்பராக உள்ளது என்று ஊடகங்கள் விமர்சனம் செய்துள்ளன. கதை ஒரே கதைதான் வேற்றுக்கிரக வாசிகளிடம் இருந்து இந்த உலகத்தைப் பாதுகாப்பது.
வழக்கம் போல அந்தக் கடமையை செவ்வனே செய்திருக்கிறார் அர்னால்ட், கடைசியில் இந்த உலகத்தை வேற்றுக்கிரக வாசிகளிடம் இருந்து பாதுகாத்து விட்டார்கள். இன்னொரு டெர்மினேட்டர் படம் புதிதாக எடுக்க மாட்டார்கள் என்று நம்பலாம்.
படத்தில் சிக்கலான உறவுகளைப் பற்றி புதுமையாகக் கூறியிருக்கிறார் இயக்குநர் ஆலன் டெய்லர். படத்தைத் தாங்கிப் பிடிப்பது சண்டைக் காட்சிகளும், விஷுவல் எபக்ட்சும் தான் வேறு சொல்லிக் கொள்ளும்படி பெரிதாக ஒன்றும் இல்லை.
இந்த வருடத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹாலிவுட் படம் டெர்மினேட்டர் ஜெனிசிஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment