ரஜினி - ஷங்கர் இணையும் புதிய படத்தில் ஆமீர்கான் நடிக்கவில்லை என்பது உறுதியாகிவிட்டது. ஆமீர்கான் தனது புதிய படத்தை அறிவித்ததன் மூலம் இது உறுதியாகியுள்ளது.
எந்திரன் 2 படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்த முதலில் ஷங்கர் அணுகியது ஆமீர்கானைத்தான். இதற்காக மும்பை போய் அவருக்கு கதையும் சொல்லியிருந்தார். எதற்கும் இருக்கட்டுமே என்று இங்கு விக்ரமிடமும் கதை சொன்னார். கமலிடமும் கேட்டுப் பார்த்தார்.
கமல் ஆரம்பத்திலேயே மறுத்துவிட்டதால், ஆமீர்கானை நம்பியிருந்தார்.
ஆனால் அவர் எந்த பதிலும் சொல்லவில்லை. இந்த நிலையில் திடீரென தன் புதிய படத்தை அறிவித்துள்ளார் ஆமீர்கான். இந்தப் படத்தை அவரது மேனேஜர் அத்வைத் சந்தன் இயக்குகிறார்.
இதன் மூலம் ஷங்கர் படத்தில் ஆமீர் கான் இல்லை என்று உறுதியாகிவிட்டது. ஆனால் தான் நடிக்கவில்லை என்பதை நேரடியாக தன்னிடமே சொல்லியிருக்கலாமே என வருத்தப்படுகிறாராம் ஷங்கர்.
Post a Comment