நள்ளிரவு 12 மணிக்கு வெளியானது விஜயின் "புலி" ட்ரெய்லர்... பாடல்கள், சண்டைக்காட்சிகளில் பிரம்மாண்டம்

|

சென்னை: விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த புலி படத்தின் டிரைலர் காட்சிகள் நள்ளிரவு சரியாக 12 மணிக்கு வெளியானது.

விஜய், ஹன்சிகா, சுருதிஹாசன், ஸ்ரீதேவி, சுதீப் ஆகியோரின் நடிப்பில் இயக்குநர் சிம்புதேவன் இயக்கியிருக்கும் புலி திரைப்படம், விஜய் ரசிகர்களிடையே மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Puli Trailor

ஏற்கனவே வெளியான புலி படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் மற்றும் பாடல்கள் ஆகியவை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதுடன் பல புதிய வரலாறுகளையும் படைத்தது.

(புலி டிரைலர்)

அடுத்ததாக புலி படத்தின் டிரைலரை 20 ம் தேதியில் வெளியிடுகிறோம் என்று நடிகை ஸ்ரீதேவியின் பிறந்தநாளில், நடிகர் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து இருந்தார்.

விஜயின் அறிவிப்பை புலி படத்தின் பாடல்களை வாங்கியிருக்கும் சோனி நிறுவனமும் உறுதி செய்து ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து தற்போது புலி படத்தின் டிரைலர் நேற்று நள்ளிரவு சரியாக 12 மணிக்கு வெளியிடப்பட்டது. பாடல்கள், மற்றும் விஜயின் அனல் பறக்கும் சண்டைக்காட்சிகளில் பிரம்மாண்டம் ஜொலிக்கிறது.

காட்சிகளின் ஒளிப்பதிவு, பின்னணி இசை, எடிட்டிங் என அனைத்தும் விஜய் ரசிகர்களை கிறங்கடிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

 

Post a Comment