சென்னை: இந்திய சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், லண்டனில் இசை நிகழ்ச்சி நடத்துகிறார்.
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், "லண்டனில் உள்ள ரசிகர்கள், நண்பர்களே, உங்களை ஆகஸ்ட் 15 அன்று லண்டன் ஓ2 அரங்கில் சந்திக்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த இசை நிகழ்ச்சியில் நீத்தி மோகன், ஜாவத் அலி, கார்த்திக், ஹரிசரண், ஜொனிதா காந்தி, கட்டானி ஆகியோரும் பங்கேற்கிறார்கள். லண்டனில் புகழ்பெற்ற அரங்கம் இந்த ஓ2.
இந்த நிகழ்ச்சியில் தமிழ், இந்தி திரைப்படப் பாடல்கள் மற்றும் தனது புகழ்பெற்ற வந்தே மாதரம் ஆல்பம் போன்றவற்றை இசைக்கவிருக்கிறார் ஏஆர் ரஹ்மான்.
Post a Comment