பாகுபலி 2 ம் பாகத்தின் தலைப்பு மஹாபலி?

|

ஹைதராபாத்: கடந்த ஜூலை மாதம் 10 ம் தேதி வெளியாகி உலகமெங்கும் ஹாலிவுட் படங்களுக்கு நிகரான புகழையும், வசூலையும் ஒருசேரக் குவித்து வரும் திரைப்படம் பாகுபலி.

இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் இயக்கத்தில் தென்னிந்திய நட்சத்திரங்கள் நடித்து வெளியான இந்தப்படம் இன்றுவரை வசூலில் சக்கைப் போடு போட்டு வருகின்றது. இதுவரை சுமார் 450 கோடியை வசூலித்திருக்கும் இத்திரைப்படம் விரைவில் 500 கோடியைத் தொடவுள்ளது.

Baahubali 2: Title Changed Mahapali?

பாகுபலி படத்தின் 2ம் பாகம் விரைவில் எடுக்கப்பட உள்ளது 40% படப்பிடிப்புகள், ஏற்கனவே முடிந்து விட்ட நிலையில் மீதமுள்ள 60% படப்பிடிப்புகள் விரைவில் தொடங்கப் படவுள்ளன.

பாகுபலியின் முதல் பாகத்தில் ஒரு ட்விஸ்ட்டுடன் படத்தை முடித்திருந்தார் ராஜமௌலி, அதனால் 2 ம் பாகத்திற்கு ரசிகர்களிடம் அபரிமிதமான எதிர்பார்ப்பும், வரவேற்பும் இருக்கிறது.

எனவே 2 ம் பாகத்தை இன்னும் பிரமாண்டமாக புதிய லொகேஷன்களில் எடுக்க முடிவு செய்திருக்கிறார் இயக்குநர், இதற்காக வட இந்தியாவின் சில இடங்களுக்கும் விசிட் செய்து இடங்களைத் தேர்வு செய்து வருகிறார் ராஜமௌலி.

பாகுபலி படத்தின் முதல் பாகம் வட இந்தியாவிலும் வசூலை வாரிக் குவித்து வருகிறது எனவே 2 ம் பாகத்தில் சில முக்கியமான பாலிவுட் நடிகர்களை நடிக்க வைக்கலாம் என்பது ராஜமௌலியின் திட்டமாக இருக்கிறது.

நாளுக்குநாள் பாகுபலி படத்தின் 2 ம் பாகத்தைப் பற்றி ஏகப்பட்ட செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன, இந்நிலையில் பாகுபலியின் 2 ம் பாகத்தின் தலைப்பு மாறலாம் என்று கூறுகிறார்கள்.

மஹாபலி என்று பாகுபலியின் 2 ம் பாகத்திற்கு தலைப்பு வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன, விரைவில் இதனை படப்பிடிப்புக் குழுவினர் உறுதி செய்தி அதிகாரப்பூர்வமான தகவலை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராஜமௌலி காரு நீங்க தலைப்பே இல்லாமக் கூட படமெடுக்கலாம்...

 

Post a Comment