சென்னை: சூது கவ்வும் படத்தில் கேரக்டர் ரோலில் நடித்த பாபி சிம்ஹாவிற்கு ஜிகர்தண்டா படம் ஒரு மிகப்பெரிய வாழ்க்கையை அளித்திருக்கிறது, மனிதரின் கையில் தற்போது அரை டஜன் படங்களுக்கும் அதிகமாக இருக்கின்றன.
உறுமீன், கவலை வேண்டாம், கோ 2, பாம்புச்சட்டை, இறைவி போன்ற படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் சிம்ஹா, ஒரே நிறுவனத்திற்கு அடுத்தடுத்து 3 படங்களை நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.
ரஜினி, மீனா, ரோஜா ஆகியோரின் நடிப்பில் 21 வருடங்களுக்கும் முன்னால் வெளிவந்து வெற்றிபெற்ற படம் வீரா, தற்போது அந்தப் தலைப்பையே பாபி சிம்ஹாவின் அடுத்த படத்திற்கு வைத்திருக்கிறார்கள்.
இந்தப்படத்தின் கதைக்கு வீரா என்கிற தலைப்பு பொருத்தமாக இருக்கும் என்று இயக்குநர் சொன்னதும், பஞ்சு அருணாசலத்தை சந்தித்து கதையைக் கூறியிருக்கிறார் தயாரிப்பாளர் எல்ரெட் குமார். கதை பிடித்ததால் பெயரைத்தர உடனே சம்மதம் சொல்லிவிட்டாராம் பஞ்சு அருணாசலம், அதனால் மகிழ்ச்சியில் இருக்கிறார் படத்தின் தயாரிப்பாளர் எல்ரெட் குமார்.
பாபி சிம்ஹாவின் நடிப்பில் ஆக்ஷன் கலந்த நகைச்சுவைப் படமாக உருவாகவிருக்கும் வீரா திரைப்படத்தை, அறிமுக இயக்குநரான கே.ராஜாராமன் ஆர்.எஸ்.இன்ஃபோடைன்மெண்ட் நிறுவனத்திற்காக இயக்குகிறார்.
இந்நிறுவனத்தின் தயாரிப்பில் ஏற்கனவே கவலைவேண்டாம், கோ 2 ஆகிய படங்களீல் நடித்துக்கொண்டிருக்கிறார் பாபிசிம்ஹா. வீரா படத்தின் மூலம் ஒரு தயாரிப்பு நிறுவனத்தின் 3 படங்களிலும் ஒரே நேரத்தில் நடிக்கும் நடிகராக மாறியிருக்கிறார் பாபி சிம்ஹா.
வலுவான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் பாபி சிம்ஹா தற்போது தமிழின் முன்னணி நடிகர்களுக்கு டப் கொடுக்கும் ஒரு நாயகனாக மாறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அசால்ட் சேதுவுக்கு அடித்தளம் வலுவா இருக்கு போல...
Post a Comment