அடுத்தடுத்து வித்தியாசமான படங்களில் நடித்து வெற்றி பெற்று வரும் விஷ்ணு விஷால் அடுத்து நடிக்கவிருப்பது கமர்ஷியல் காமெடி ஹிட்டுகளைத் தந்து வரும் எழில் இயக்கத்தில்.
ஆரம்பத்தில் துள்ளாத மனமும் துள்ளும், பெண்ணின் மனதைத் தொட்டு என ரொம்ப சீரியஸ் படங்களைத் தந்தவர்தான் எழில். ஆனால் ஹிட் ஒன்றுதான் கோடம்பாக்கத்தில் நிலைக்க வைக்கும் என்பது புரிந்ததால், ரூட்டை மாற்றி மனம் கொத்திப் பறவையை எடுத்தார்.
அந்த ரூட்டிலேயே ‘தேசிங்கு ராஜா', ‘வெள்ளக்கார துரை' ஆகிய படங்களைத் தந்தார்.
இதே போன்ற காமெடிப் கதையில்தான் இப்போது விஷ்ணுவை இயக்குகிறார். இந்தப் படத்தில் விஷ்ணுவுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை, பிற நடிகர்கள், மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியலை விரைவில் வெளியிட இருக்கின்றனர்.
விஷ்ணு நடிப்பில் உருவாகியுள்ள ‘இடம் பொருள் ஏவல்' படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. இதுதவிர ‘கலக்குற மாப்ளே', ‘வீர தீர சூரன்' ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார் விஷ்ணு.
Post a Comment