ஜீ தமிழ் டிவியில் அர்ச்சனாவின் அதிர்ஷ்ட லட்சுமி...

|

ஜீ தமிழ் தொலைக்காட்சியின் புதிய கேம் ஷோ அதிர்ஷ்ட லட்சுமி. இல்லத்தரசிகளுக்கு பரிசுகளை அள்ளித்தர வருகிறார் தொகுப்பாளினி அர்ச்சனா.

தொலைக்காட்சிகளில் புதிது புதிதாக கேம்ஷோக்கள் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கின்றன. போட்டிகளும் அதிகரித்துக் கொண்டுதான் வருகிறது. குழந்தைகளுக்கான கேம்ஷோவில் இல்லத்தரசிகளும், குடும்ப உறுப்பினர்களும் பங்கேற்கின்றனர்.

Athirshta Laksmi Game show on Zee Tamil TV

இந்த நிலையில் இல்லத்தரசிகளைக் கவரும் வகையில் கேம் ஷோ ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது ஜீ தமிழ் டிவி. சமையல், சீரியல் என வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடக்கும் இல்லத்தரசிகளின் திறமைகளை உலகறியச் செய்யும் நிகழ்ச்சி அதிர்ஷ்ட லட்சுமி.

சன் டிவியில் காமெடி டைம், விஜய் டிவியில் நம்ம வீட்டுக் கல்யாணம் ஆகிய நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய அர்ச்சனா, ஜீ தமிழ் டிவியில் அதிர்ஷ்ட லட்சுமியை தொகுத்து வழங்குகிறார்.

பொது அறிவு கேள்விகளுக்கு பதில் சொல்லி அட்டகாச பரிசுகளை அள்ளிச் செல்லுங்க இல்லத்தரசிகளே என்கிறார் அர்ச்சனா. "அதிர்ஷ்ட லட்சுமி"., பெண்களுக்கான புத்தம் புதிய கேம் ஷோ, செப்டம்பர் 2 முதல், புதன் முதல் வெள்ளி வரை இரவு 8:30 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

 

Post a Comment