மனதை தேத்திக்கிட்டு அனுஷ்காவின் இந்த வீடியோவை பாருங்கள்!

|

மும்பை: பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா ஆஸ்கர் விருது வென்ற பாடகி அடீல் பாடிய ரோலிங் இன் தி டீப் பாடலை பாடி அதை வீடியோ எடுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா நடிப்பில் வெளியான பாம்பே வெல்வெட் படத்தில் அவர் ஜாஸ் பாடகியாக நடித்திருந்தார். இந்நிலையில் நிஜவாழ்க்கையிலும் அவர் பாடகியாக மாறியுள்ளார். படத்தில் பாடியுள்ளாரா என்று நினைக்க வேண்டாம்.

ஆஸ்கர் விருது வென்ற பாடகி அடீல் பாடிய ரோலிங் இன் தி டீப் பாடலை பாடி அதை வீடியோ எடுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் அனுஷ்கா.

இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

தங்கத்தை கண்டுபிடித்துவிட்டேன்! கொஞ்சமும் பயம் இன்றி சுற்றியுள்ளவர்களை பற்றி நினைக்காமல் மோசமாக பாடுவதை கட்டவிழ்த்துவிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

 

Post a Comment