தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் நகரில் உலகத் திரைப்பட விழா நாளை தொடங்குகிறது.
மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய சிறிய நகரமான கம்பம் மற்றும் அதன் சுற்றுப் புறப் பகுதிகளிலிருந்து எத்தனையோ இளைஞர்கள் திரைத் துறையில் கால் பதித்துள்ளனர்.
இந்த கம்பம் நகரில் முதல் முறையாக உலகத் திரைப்பட விழாவை நடத்துகிறது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் நிழல் திரைப்பட சங்கம்.
நாளை வெள்ளிக்கிழமை தொடங்கி, 3 நாள்கள் நடக்கும் இந்த விழாவுக்கான "டீஸர்' சமீபத்தில் வெளியிடப்பட்டது.
இந்த உலகத் திரைப்பட விழா கம்பம் அமராவதி திரையரங்கில், வெள்ளிக்கிழமை (ஆக. 28) முதல் 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த விழாவில், இந்தியா, சீனா, போலந்து, ரஷியா உள்ளிட்ட 9 நாடுகளைச் சேர்ந்த 16 மொழி திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.
Post a Comment