தல நடிகரின் படத்திற்கு தண்ணி காட்டும் வாரிசு நடிகை

|

சென்னை: தமிழ் தவிர தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிப் படங்களிலும் நடித்து முன்னணி நடிகையாக வளர்ந்திருக்கும் அந்த வாரிசு நடிகையைப் பற்றி அரசல்புரசலாக எழுந்த தகவல்கள் தற்போது காட்டுத்தீ வேகத்தில் பரவிவருகின்றது.

இரவு பகல் என்று மாறிமாறி இந்தியா முழுவதும் பறந்து பறந்து நடித்த அந்த நடிகை தற்போது ஏகத்திற்கும் கால்ஷீட் சொதப்பலில் ஈடுபட்டு வருகிறாராம். தமிழ் தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் ஏகப்பட்ட படங்களில் நடிகை ஒப்பந்தமாகியிருக்கிறார்.

நடிகை நடித்து இந்த வருடம் வெளிவந்த படங்கள் அனைத்தும் ஹிட்டடிக்க விளைவு நடிகையின் காட்டில் அடைமழை பொழிகிறது, ஆனால் இதனை சரியாக பயன்படுத்திக் கொள்ள மறுக்கிறார் நடிகை.

ஏகப்பட்ட படங்களுக்கு கால்ஷீட் கொடுத்திருந்தாலும் கொடுத்த கால்ஷீட் படி நடிக்காமல் தனது இஷ்டத்திற்கு நடித்து வருகிறாராம், இது தவிர சைடு கேப்பில் நண்பர்களுடன் பார்ட்டி, பங்க்ஷன் மற்றும் ஊர்சுற்றல் என்று ஏகத்திற்கும் லூட்டி அடித்துக் கொண்டிருக்கிறாராம்.

நடிகையின் இந்த கால்ஷீட் சொதப்பலில் அதிகமாக பாதிக்கப்படுவது கோட்சூட் நடிகரின் படம் தானாம், தீபாவளி தினத்தில் படம் வெளியாகும் என்று அறிவித்திருப்பதால் சிறுத்தையான இயக்குநர் சீறிப் பாய்ந்து வேலை செய்து கொண்டிருக்கிறார்.

ஆனால் நடிகையின் கால்ஷீட் சொதப்பலைப் பார்த்தால் படம் தீபாவளிக்கு என்ன பொங்கலுக்கு கூட வர வாய்ப்பில்லை என்று கூறுகிறார்கள். இதனால் கலங்கிப் போன நடிகரும், தயாரிப்பாளரும் கோட்சூட் நடிகரிடம் நீங்கள் ஒரு வார்த்தை சொன்னால் நடிகை தட்ட மாட்டார் என்று கேட்டிருக்கின்றனர்.

ஆனால் நான் அடுத்தவர்களின் சொந்தப் பிரச்சினைகளில் தலையிடுவதில்லை என்று நடிகர் மறுத்து விட்டாராம், இதனால் தீபாவளிக்கு திட்டமிட்டபடி படம் வெளியாகுமா? என்று கதிகலங்கிப் போயிருக்கின்றனர் ஒட்டுமொத்த படக்குழுவினரும்.

அந்த நடிப்பு தெய்வத்தின் மகளா நீ? அப்படின்னு நான் கேட்கல பாஸ்...

 

Post a Comment