ஈரோடு: ஈரோட்டில் தேனீக்கள் விரட்டி விரட்டி கொட்டியதால் புதுபடத்தின் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.
புதிய தமிழ்ப்படத்தின் படப்பிடிப்பு ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் அருகே உள்ள மேவானி கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்றது. அப்போது அருகில் இருந்த காட்டுப்பகுதியில் இருந்து திடீர் என வந்த தேனீக்கள் படக்குழுவினரை விரட்டி விரட்டி கொட்டியது.
சிலர் அந்த இடத்தை விட்டு ஓடினர். மேலும் சிலர் தேனீக்களிடம் இருந்து தப்பிக்க அருகில் உள்ள வீடுகளுக்குள் புகுந்தனர். தேனீக்களிடம் கடி வாங்கிய நடிகர்கள் உள்ளிட்ட படக்குழுவினரில் சிலர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
மற்றவர்களுக்கு கிராம மக்களே முதலுதவி அளித்தனர். இந்த சம்பவத்தால் நேற்று படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. மேலும் இரண்டு நாட்களுக்கு படப்பிடிப்பை ரத்து செய்துள்ளதாக தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.
தேனீக்கள் தொல்லையால் படப்பிடிப்பு ரத்தானது இது ஒன்றும் முதல் முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment