ரஜினியின் வெற்றிப் படங்களுள் ஒன்றான ஜானி படத்தை ரீமேக் செய்து நடிக்கும் முயற்சியில் இருப்பதாக நடிகர் ஜீவன் தெரிவித்தார்.
ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடித்து 1980-ல் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய படம், ‘ஜானி'. ஸ்ரீதேவி நாயகியாக நடிக்க மகேந்திரன் இயக்கிய படம்.
இளையராஜாவின் இசையில் அத்தனை பாடல்களும் அமுதமாய் இனித்தன.
இந்தப் படத்தை ரீமேக் செய்ய பலரும் முயற்சித்து வருகின்றனர். இந்த நிலையில் தானும் அப்படி ஒரு முயற்சியில் இறங்கியுள்ளதாக நடிகர் ஜீவன் தெரிவித்துள்ளார்.
நான்கைந்து ஆண்டு இடைவெளிக்குப் பிறகு அதிபர் என்ற படத்தில் நடித்து வரும் அவர், ஜானி பட ரீமேக் பற்றிக் கூறுகையில், "நான் ஏற்கனவே ஜெமினிகணேசனின் ‘நான் அவனில்லை' படத்தை மீண்டும் தயாரித்தபோது அதில் நடித்தேன். அந்த படம் வெற்றிகரமாக ஓடியது.
அடுத்து ரஜினிகாந்தின் ‘ஜானி' படத்தை மீண்டும் தயாரித்தால் அதில் நடிக்க விரும்புகிறேன். அதற்கான முயற்சியிலும் ஈடுபட்டு இருக்கிறேன். தற்போது ‘அதிபர்' என்ற படத்தில் நடித்து இருக்கிறேன்.
இனி எந்தப் படத்திலும் வில்லனாக நடிக்க மாட்டேன்," என்றார்.
Post a Comment